மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேற்று மட்டும் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அங்கு ராணுவ ஆட்சி அமலானதை கண்டித்தும், ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வலுயுறுத்தியும் யாங்கோன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்து வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் நேற்று மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.