நடப்பு ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க் உள்பட 329 பேர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர்.
உலக அளவில் இயற்பியல், அமைதி, வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் விதமாக நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 234 தனிநபர்களுடன், 95 அமைப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைப் பட்டியலில் 376பேர் இடம் பெற்று இருந்தனர்.
அதற்கு பிறகு 3வது முறையாக அதிகளவில் தற்போது தான் இவ்வளவு பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நோபெல் கமிட்டி தெரிவித்துள்ளது.