விண்வெளிக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும், அமெரிக்காவின் ஆர்பிட்டல் அசெம்பளி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் ஹோட்டலின் கட்டுமானப் பணிகள் வரும் 2025ம் ஆண்டில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஹோட்டலில் தங்கும் அறைகள், சினிமா தியேட்டர், மதுக்கூடம், மசாஜ் கிளப் என ஏராளமான பணிகள் நடந்து வருகின்றன. ஒரே நேரத்தில் 400 பேர் வரை தங்கும் வசதி கொண்ட இந்த ஹோட்டலின் கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
பணிகள் நிறைவுற்ற பின் இது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிடம் விற்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 2025ல் கட்டுமானப் பணிகள் முடிந்தாலும் 2027ம் ஆண்டு முதல்தான் மனிதர்கள் செல்லமுடியும் என்று ஆர்பிட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால் கட்டுமானப் பணிகளுக்கான செலவு, மனிதர்கள் தங்கும் செலவு குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.