மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், காயமடைந்த நபரை, சக போராட்டக்காரர்கள் தூக்கிக் கொண்டு ஓடும் பதபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ராணுவ ஆட்சி அமலானதை கண்டித்தும், ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்யக்கோரியும் யாங்கோன் நகரில் ஏராளமானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், போராட்டக்காரர்களை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.