நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 317 பள்ளி மாணவிகளை விடுவிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுவரும் நிலையில், தலைநகர் நைஜர் அருகே அண்மையில் பள்ளியிருந்து கடத்திச் செல்லப்பட்ட 27 ஆண் மாணவர்கள் மற்றும் 15 பள்ளி ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தீவிரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டனர்.
மாணவர்களை மீட்க ராணுவத்தினர் தீவிரவாதிகளுடன் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ஒரு மாணவன் கொல்லப்பட்டான்.
பணம் கேட்டு மிரட்ட அடிக்கடி மாணவர்களை தீவிரவாதிகள் கடத்திச் செல்வது அந்நாட்டில் வாடிக்கையாக உள்ளது.