சவுதி அரேபியா குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரித்துள்ளார்.
சவுதி அரேபியா பத்திரிக்கையாளார் ஜமால் கஷோகி கடந்த 2018ஆம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்குச் சென்றபோது கொலை செய்யப்பட்டார்.
சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மானின் அனுமதியுடன் ஜமால் கஷோகி கொலை செய்யபட்டதாக நேற்று அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.
இது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என ஜோ பைடன் கூறியுள்ளார்.