ஸ்மார்ட்போன் மூலம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் முறையை பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
கோர்டயல் ஒன் என்று பரிசோதனை கருவிக்கு பெயர் சூட்டிய ஆராய்ச்சியாளர்கள், பரிசோதனை மேற்கொண்ட 10 நிமிடங்களில் துல்லியமான முடிவுகளை தரக்கூடிய வல்லமை கருவிக்கு உள்ளது என்று தெவித்து உள்ளனர்.
பொது இடங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் இக்கருவி உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், 300 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 90 சதவீத துல்லியமான முடிவுகள் கிடைத்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.
அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் முடிந்த பின் பொது பயன்பாட்டு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தனர்.