கரீபியன் தீவு நாடுகளான ஹைத்தியில் சிறைத்துறை அதிகாரியைக் கொன்று கொடூரமான குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
தலைநகர் போர்ட் அ பிரின்ஸ் என்ற இடத்தில் உள்ள சிறையில் கொடூரமான குற்றங்கள் செய்த குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறையில் திடீரென ஏற்பட்ட கலவரத்தைப் பயன்படுத்தி காவல் அதிகாரி மற்றும் 7 கைதிகள் கொலை செய்யப்பட்டனர்.
அப்போது வன்முறையில் ஈடுபட்ட அர்னல் ஜோசப் என்ற குற்றவாளியும், அவனது கூட்டாளிகளும் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.
தப்பிச் சென்றவர்களில் 40 பேர் மீண்டும் பிடிபட்டுள்ளதாகவும், எஞ்சியவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும், ஹைத்தி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.