தீவிரவாதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிய பாகிஸ்தானை தொடர்ந்து கிரே எனப்படும் சாம்பல் நிறப் பட்டியலில் வைக்க பாரீசில் உள்ள சர்வதேச நிதிக் கண்காணிப்பு அமைப்பான FATF முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட அனைத்து காலக்கெடுவும் முடிவடைந்த நிலையில் முழுமையாக தீவிரவாதிகளை கைது செய்யாமல் தவிர்க்கும் பாகிஸ்தான் வரும் ஜூன் மாதத்திற்குள் சர்வதேச ரீதியாக தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்ட ஆயிரத்து 373 தீவிரவாதிகள் மீதும், பட்டியலிடப்பட்டுள்ள இதர ஆயிரத்து 267 தீவிரவாதிகள் மீதும் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று புதிய கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இது இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு மிகப்பலத்த அடியாக கருதப்படுகிறது.