ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் கலவரம் ஏற்பட்டதில் 62 கைதிகள் உயிரிழந்தனர்.
அந்த நாட்டில் மொத்தமுள்ள 60 சிறைகளில் 29 ஆயிரம் கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும் என்ற நிலையில் 38 ஆயிரம் கைதிகள் உள்ளனர்.
கைதிகளை கண்காணிக்க 1,500 காவலர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் குயாகுவில் உள்ள சிறையில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த இரு தரப்பு கைதிகளிடையே மோதல் வெடித்தது.
இதில் 21 கைதிகள் பலியாகினர். குயெங்கா நகரில் உள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 33 கைதிகள் கொல்லப்பட்டனர்.
லடகுங்கவா நகர சிறையிலும் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 8 கைதிகள் பலியாகினர். இதையடுத்து 3 சிறைகளிலும் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.