டிஜிட்டல் பெரு நிறுவனங்களான கூகுள், ஃபேஸ்புக் போன்றவை தாங்கள் வெளியிடும் உள்ளூர் செய்திகளுக்கு பணம் செலுத்த வேண்டும் எனபதற்கான வரலாற்று சட்ட மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
ஆன்லைன் விளம்பரங்கள் வாயிலாக கோடிகளை குவிக்கும் இந்த நிறுவனங்கள் ஊடக நிறுவனங்களின் செய்திகளையும் வெளியிட்டு பணம் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் ஊடக நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், செய்திகளை வெளியிட டிஜிட்டல் நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது.
இந்த நிலையில், தாங்கள் வெளியிடும் உள்நாட்டு செய்திகளுக்கு பணம் கொடுக்க கூகுளும், ஃபேஸ்புக்கும் முன்வந்த நிலையில் அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.