வேலைக்குச் செல்லும் பலரும் தங்கள் வேலையிலிருந்து தப்பிக்கப் பல காரணங்கள் சொல்லி லீவ் கேட்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். பாஸ்ஸிடம் உடம்பு சரி இல்லை அதனால் லீவ் வேண்டும் என்று சிலர் கூறுவார்கள். இன்னும் சிலர், பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன தாத்தா, மீண்டும் இறந்துவிட்டதாகக் கூறி லீவ் கேட்பார்கள்.
அமெரிக்காவில் ஒரு இளைஞர் ஒரு படி மேலே சென்று, வேலையிலிருந்து தப்பிக்க வேற லெவலில் பிளான் போட்டுள்ளார்.
அமெரிக்காவின், அரிசோனாவில் உள்ள கூலிட்ஜ் நகரைச் சேர்ந்தவர் பிராண்டன் சோல்ஸ்.19 வயதாகும் இவர், வேளைக்குச் செல்வதைத் தவிர்க்க ஒரு சுவாரசியமான திட்டத்தை அரங்கேற்றினார்.
கூலிட்ஜ் நகரத்தில் வசிக்கும் மக்கள் சிலர் அப்பகுதி போலீசாரிடம் , கை கால்கள் கட்டப்பட்டு , வாயில் துணியுடன் இளைஞர் ஒருவர் வீதியில் இருப்பதாகத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு விசாரித்தனர். விசாரணையில் அந்த இளைஞர் , பிராண்டன் சோல்ஸ் என்று தெரியவந்து.
முகமூடி அணிந்த இரண்டு பேர் தன்னை காரில் கடத்திவிட்டதாகவும்,தன்னை மண்டையில் அடித்து விட்டு வீதியில் வீசி சென்றதாகவும் பிராண்டன் சோல்ஸ் போலீசாரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து விசாரணையை முடுக்கிவிட்ட போலீசாரும் குற்றவாளிகளைத் தேடி அலைந்து வந்தனர். ஆனால் போலீசாருக்கு எந்த ஆதாரமும் சிக்கவில்லை.
இதனால் போலீசாருக்கு லைட்டாக, பிரானுடன் சோல்ஸ் மீது சந்தேகம் வரத் தொடங்கியது. அதன் அடிப்படையில், பிராண்டன் சோல்சிடம் விசாரணை நடத்தியபோது, வேலையிலிருந்து தப்பிக்க அவர் கடத்தல் நாடகம் அரங்கேற்றியது தெரியவந்தது. வேளைக்கு செல்லாமல் எஸ்கேப் ஆக தன்னை தானே கடத்தியுள்ளார் பிராண்டன்.
இதனைத் தொடர்ந்து பிராண்டன் சோல்சை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு 550 அமெரிக்கா டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தோல்வியில் முடிந்த கடத்தல் நாடகத்தில் துவண்டுபோன பிராண்டன் சோல்ஸ் இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.