6 கால்கள், இரண்டு வாலுடன் வித்தியாசமான நாய்க்குட்டி ஒன்று அமெரிக்காவில் பிறந்துள்ளது.
ஒக்லஹோமா நகரில் உள்ள நீல் கால்நடைகள் மருத்துவமனையில் பிறந்த இந்த விநோத நாய்க்குட்டிக்கு ஸ்கிப்பர் என பெயரிடப்பட்டுள்ளது.
ஸ்கிப்பருக்கு ஆறு கால்கள் மற்றும் இரண்டு வால்கள், இரண்டு இடுப்பு பகுதிகள் உள்ளன. மோனோசெபாலஸ் டிபிகஸ் (monocephalus dipygus) போன்ற ஒருவகை பிறவி கோளாறே ஸ்கிப்பர் வித்தியாசமாக பிறந்ததற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.