செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் தரையிறங்கிய போது பதிவு செய்யப்பட்ட தனது முதல் ஆடியோ பதிவை நாசா வெளியிட்டுள்ளது.
ரோவர் விண்கலம் கடந்த 18ஆம் தேதி தரையிறங்கிய போது கடைசி நிமிட வீடியோ பதிவும் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தில் 25 கேமராக்கள் மற்றும் இரண்டு மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட்டுள்ளன.
செவ்வாய் கிரகத்தில் களமிறங்கும் போது இந்த கேமரா இயங்க தொடங்கும் அளவுக்கு பொருத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து 7 மாத பயணத்திற்கு பின் தற்போது ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளது.