ரஷ்யாவில் பறவைகளிடம் இருந்து முதன்முறையாக மனிதர்களுக்கு H5N8 என்ற புதிய வகை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது.
இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் சுகாதார கண்காணிப்பு குழு தலைவர் Anna Popova, வெக்டர் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் தெற்கு ரஷ்யாவில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் 7 தொழிலாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மரபணுக்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியதில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளதாக கூறினார்.
ஆனால் அவர்கள் அனைவரும் எந்தவொரு கடுமையான பாதிப்புளையும் சந்திக்கவில்லை என்றார். இந்த காய்ச்சல் பற்றிய தகவல்கள் அனைத்தும் உலக சுகாதார அமைப்பிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.