செவ்வாயில் தரையிறங்குவதற்கு சற்றுமுன்னதாக எடுத்த செல்ஃபியை, நாசாவின் ஆய்வூர்தியான பெர்சிவரன்ஸ் அனுப்பியுள்ளது.
செவ்வாயின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த பெர்சிவரன்ஸ், அங்கு தரையிறங்கியதை, ஏழு நிமிட பயங்கரம் என விஞ்ஞானிகள் வர்ணிக்கின்றனர். அந்த 7 நிமிடங்களில் கரணம் தப்பினால் மரணம் என்பதற்கேற்ப, ஆய்வூர்தி விழுந்து நொறுங்கியிருக்கக் கூடிய வாய்ப்புகள் இருந்தன. ஆனால், திட்டமிட்டபடி பெர்சிவரன்ஸ் வெற்றிகரமாக தரையிரங்கியதோடு, தரையைத் தொடுவதற்கு சற்றுமுன் எடுத்த செல்ஃபியை பூமிக்கு அனுப்பியுள்ளது.
கேபிள்களால் பிணைக்கப்பட்டு செவ்வாயின் பரப்பில் ஆய்வூர்தி பக்குவமாக தரையிறங்குவது வண்ணப் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. இத்தகையதொரு செல்ஃபி என்பதும், இவ்வளவு தெளிவான குளோஸ்அப் புகைப்படம் விண்வெளி வரலாற்றில் முதல்முறை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.