அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதலுக்கு காரணமாக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட கண்டன தீர்மான வழக்கில் இருந்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு செனட் சபையின் வாக்கெடுப்பில் 57 பேரின் ஆதரவைப் பெற்று டிரம்ப் விடுவிக்கப்பட்டார்.எதிரணிக்கு 43 வாக்குகள் பதிவாகின.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்க வரலாற்றில் ஒரு அதிபருக்கு எதிராக இப்படி ஒரு சூன்ய வேட்டை நடந்தது இல்லை என்றார்.