ஜப்பான் நாட்டின் புகுஷிமா பிராந்தியத்தில், பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டரில் 7 புள்ளி 1ஆகப் பதிவாயிருப்பதால், ஜப்பான் நாடு முழுவதும் கடும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது. பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோதும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாதது, ஜப்பான் மக்களை ஆசுவாசப்படுத்தியிருக்கிறது. புகுஷிமாவில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கம், ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட நகரங்களையும் உலுக்கியுள்ளது.
2011ஆம் ஆண்டு, 9 புள்ளி பூஜ்ஜியம் ரிக்டர் அளவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தால், சுனாமி உருவாகி, புகுஷிமா அணு உலைகள் முற்றாக சீர்குலைந்தன. 10 ஆண்டுகள் ஆனபோதும், கதிர்வீச்சுடன் உறங்கும் பேராபத்தாகவே அது தொடர்வதால், இன்றைய நிலநடுக்கம், ஜப்பான் மக்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.