செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இதயதுடிப்பை வைத்தே கொரோனாவை கண்டுபிடிக்கும் ஸ்மாட்ர்ட் வாட்ச்... ஆரம்ப நிலையிலே கண்டுபிடித்துவிடலாம்!

Feb 13, 2021 11:20:17 AM

ரேபிட் டெஸ்ட் மற்றும் பி.சி.ஆர் கருவிகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்றை ஆரம்ப நிலையியே ஸ்மார்ட் வாட்ச் மூலம் கண்டறிந்துவிடலாம் என்று ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்றைக் கண்டறிய பிசிஆர் கிட், ரேபிட் கிட் ஆகிய பரிசோதனைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்றை ஆப்பிள், பிட்பிட் ( Fitbit ) மற்றும் கார்பின் ( Garbin ) போன்ற ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவும் கண்டறியலாம் என்று அமெரிக்காவின் மவுண்ட் சினாய் மருத்துவமனையின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்காக மவுண்ட் சினாய் மருத்துவமனையில் பணிபுரியும் 100 சுகாதார பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் அணிவிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பங்கேற்பாளர்களின் சுகாதாரத் தரவுகளை ஆய்வாளர்கள் தினமும் கண்காணித்து வந்தனர். அந்தத் தரவுகளின் அடிப்படையில், பங்கேற்பாளர்களின் இதயத் துடிப்பு (எச்.ஆர்.வி) மாற்றங்களை வரைபடமாக்கினர். மேலும், காய்ச்சல், சளி மற்றும் உடல் பலவீனம் அறிகுறிகளையும் கண்காணித்தனர்.

இதன் மூலம், மற்ற கருவிகளைக் கொண்டு கொரோனா நோய்த் தொற்றை உறுதி செய்வதற்கு முன்னரே, நோய்த் தொற்றின் தாக்கம் ஸ்மார்ட் வாட்ச்சால் கண்டறியப்பட்டது. மருத்துவ இணைய ஆராய்ச்சி இதழ் வெளியிட்டுள்ள செய்தியில் ’இந்த ஆய்வு முடிவு டிஜிட்டல் ஆரோக்கியத்தின் எதிர்காலத்தை எடுத்துக்காட்டுகிறது. நோய்வாய்ப்பட்ட நபர்கள் நோய் தொற்று பற்றி அறிவதற்கு முன்பே, ஸ்ட்மார்ட் வாட்ச் மூலம் நோயை அடையாளம் காண்பதென்பது கோவிட் 19 வைரஸ் தொடர்பான போரில் ஒரு முன்னேற்ற செய்தி” என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகமும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளது.


Advertisement
ரஷ்யாவை சேர்ந்த பிரபல பாலே நடன கலைஞருக்கு பிரியா விடை..
கின்னஸ் சாதனை நாள்: உலகின் உயரமான, குட்டையான பெண்கள் சந்திப்பு
காசாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் வலியுறுத்தி ஐநா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..
பிரிட்டன் பெல்ஃபாஸ்ட் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் இந்திய துணைத் தூதரகம் - பிரதமர் மோடி
பிரான்ஸ் ராணியின் வைர நெக்லஸ் ஏலத்தில் விற்பனை.. இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது
கிழக்கு ஆப்பரிக்காவில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏரியின் தெற்கே உள்ள ருசிசி அணையில் நீரோட்டம் பாதிப்பு
லண்டனில் இளம் பெண்ணின் சடலம் காரில் இருந்து மீட்கப்பட்டது குறித்து விசாரணை
ரஷ்யாவுடனான போரை அடுத்த ஆண்டு முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை
நாசாவிற்குப் போட்டியாக சீனா அமைத்துவரும் 'டியாங்காங்' விண்வெளி மையம்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement