பாகிஸ்தான், மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
பாபர் எனப் பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை, 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் ஆற்றல் கொண்டதாக, பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
நீர் மற்றும் நிலப்பரப்பில் உள்ள இலக்கை தாக்க இயலும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 20ஆம் தேதி 2,750 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கும், அணுஆயுத தாக்குதல் ஏவுகணையையும், கடந்த 3ஆம் தேதி 290 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் ஏவுகணையையும் பாகிஸ்தான் பரிசோதித்து பார்த்துள்ளது.