பாலஸ்தீனியாவின் காசா நகரில், தீவிபத்தால் முகத்தில் காயமடைந்தோருக்கு, அந்த நாட்டிலேயே முதன்முறையாக 3டி பிரிண்டரில் தயாரிக்கப்பட்ட முகமூடி உருவாக்கப்பட்டு, தொண்டு நிறுவனத்தால் அளிக்கப்பட்டு வருகிறது.
பிரான்ஸிலிருந்து இறக்குமதியான திடமான பிளாஸ்டிக்கை கொண்டு 3டி பிரிண்டரில் தயாரிக்கப்படும் முகமூடிகள், திசுக்களை மென்மைப்படுத்தி, முகத்தில் தழும்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதை அணிந்துகொண்ட அகமது அல் நடார் என்பவர், ஷாப்பிங் செல்லும் அளவுக்கு அது சவுகரியமாக இருப்பதாக தெரிவித்தார்.