இங்கிலாந்தில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த அளவிலான தட்பவெப்ப சூழல் நிலவி உள்ளது.
இங்கிலாந்தில் கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் மக்கள் சாலைகளிலும், கொட்டும் பனியிலும் சறுக்கி விளையாடி தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இங்கிலாந்தில் மைனஸ் 16 புள்ளி 7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்த தட்பவெப்ப நிலை நிலவி உள்ளது. இதற்கு முன் கடந்த 2010-ஆம் ஆண்டு இதுபோன்ற சூழல் நிலவியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.