சவுதிக்கு ஒன்று புள்ளி 9 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் ஏற்றுமதிக்கு இங்கிலாந்து ஒப்புதல் அளித்துள்ளது.
ஏமன் நாட்டில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிடும் சவுதிக்கு ஆயுதங்கள் ஏற்றுமதிக்கு கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்து தடை விதித்தது.
இந்நிலையில் ஏமன் பிரச்னையில் சவுதிக்கு வழங்கி வந்த ஆதரவை அமெரிக்க வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, ஆயுத ஏற்றுமதிக்கு இங்கிலாந்து ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி ஏவுகணைகள், குண்டுகள் போன்றவை ஆயுதப்பட்டியலில் அடங்கும்.
இந்த ஆயுதங்களின் ஏற்றுமதி விரைவில் தொடங்கும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.