போலந்து நாட்டில் வி4 அமைப்பு நாடுகளின் அதிபர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு போலந்து அதிபர் Andrzej Duda தலைமை தாங்கினார். செக் குடியரசு, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்து நாட்டின் அதிபர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த வி4 அமைப்பு 30ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இதன் ஆண்டு விழாவை முன்னிட்டு 2 நாட்கள் சிறப்பு கூட்டம் நடத்தப்படுகிறது.
வருகிற 15ந்தேதி நடைபெற உள்ள இந்த அமைப்பின் ஆண்டு விழாவில் வி4 அமைப்பின் பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர்.