தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் பிரமாண்ட விமானம் தாங்கிக் கப்பல்களான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் மற்றும் யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் ஆகிய கப்பல்கள் வந்துள்ளன.
ஆனால் அமெரிக்கக் கடற்படையினர் சவாலான சூழ்நிலையில் பணியாற்றும் திறனை நிரூபிக்கும் வகையில் பயிற்சி மேற்கொள்ளவே வந்திருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபருடன் பேசியபோது, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க நாடுகள் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இரு விமானம் தாங்கிக் கப்பல்கள் வந்திருப்பது தென் சீனக் கடல் பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.