ஆர்டிக் பிராந்திய விவகாரத்தில், ரஷ்யாவை எச்சரிக்கும் விதமாக, அமெரிக்கா, தனது குண்டுவீசும் போர் விமானங்களை, நார்வேயில் நிலைநிறுத்த உள்ளது.
ஆர்டிக் சர்வதேச வான்பரப்பு மற்றும், வடமேற்கு கடற்பிரதேசங்களில், தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முயற்சிப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனால், ஆர்டிக் மண்டலத்தில் உள்ள நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து உள்ளிட்ட அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு, ரஷ்யாவின் ஆதிக்கப் போக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இதையடுத்து, அமெரிக்க விமானப்படையின் குண்டுவீசும் திறன் கொண்ட, B-1 எனப் பெயரிட்ட, 4 போர் விமானங்கள், நார்வேயின் ஆர்லேண்டு, விமானப் படை தளத்திற்கு அனுப்பப்பட உள்ளன.
இவற்றுடன், 200 அமெரிக்க ராணுவ வீரர்களையும், அனுப்பி வைக்க, அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது