அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா விரைந்து இணைய வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.டெக்ரானில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவேத் செரீப்,ஈரானில் வருகிற ஜூன் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்றார்.
இதனால் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா விரைந்து செயலாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
வரும் 21-ம் தேதிக்குள் அமெரிக்கா பொருளாதார தடைகளை தளர்த்தாவிடில் , ஈரான் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.