துபாயில் பெருகி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது.
துபாயில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிகை அதிகரித்து வருவதை அடுத்து கேளிக்கை விடுதிகள், மதுபானக் கூடங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
மேலும் திருமண வீடுகள் மற்றும் தனியார் பார்ட்டிகளில் அதிகபட்சமாக 10 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் 70 சதவீத வாடிக்கையாளர்களுடன் ஷாப்பிங் மால்கள் செயல்பட அனுமதிக்கபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் உணவகங்கள் மற்றும் விடுதிகள் பகல் ஒரு மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.