மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இரு சக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனர்.
மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதை கண்டித்து நாள்தோறும் மக்கள் புதுப் புது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் டேவி நகர சாலையில் திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பர்மிய மக்கள் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றும், ராணுவ ஆட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.