கத்தாரில், அரேபிய குதிரைகளுக்காக நடைபெற்ற அழகு போட்டியில் வெற்றி பெற்ற 3 குதிரைகளுக்கு 25 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.
தலைநகர் தோஹாவில் நடைபெற்ற அழகு போட்டியில், வளைகுடா மற்றும் ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்த 252 குதிரைகள் கலந்து கொண்டன.
வயதின் அடிப்படையில் 3 பிரிவுகளாக நடைபெற்ற அழகு போட்டியில், முகத்தோற்றம், உடல்வாகு மற்றும் நடையின் அடிப்படையில் வெற்றி பெற்ற குதிரைகள் தேர்வு செய்யப்பட்டன.