சீன அரசு, பாகிஸ்தான் ராணுவத்துக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்கி உள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை சீன அரசு நன்கொடையாக வழங்கிய Sinopharm தடுப்பூசி மருந்துகள் மூலம் பாகிஸ்தான் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கின.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக இன்று சீனாவில் இருந்து ராணுவ விமானம் மூலம் கொரொனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன.
இது வரை எந்த நாட்டு ராணுவத்துக்கும் சீனா தடுப்பூசிகளை வழங்காத நிலையில் முதன் முதலாக பாகிஸ்தான் ராணுவத்துக்கு வழங்கி உள்ளது.