மியான்மரில் ராணுவ சதிக்கு எதிராகவும், தேசிய தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்கவும் கோரி ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் ஆர்ப்பட்ட பேரணி நடத்தினர்.
சிவப்பு நிற பலூன்களை ஏந்தி சென்ற அவர்கள், யாங்கூன் நகரின் சாலைகளில் திரண்டு, ராணுவத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
ராணுவ ஆட்சி வேண்டாம், ஜனநாயகமே எங்களுக்கு தேவை என அவர்கள் முழங்கினர். அப்போது ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டது.
மியான்மரில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால், ராணுவத்திற்கு எதிரான ஆர்பாட்டங்கள் சமூகவலைதளங்களில் பெரிய அளவில் பரவவில்லை.