விமானத் தயாரிப்புத் துறையில் இணைந்து செயல்படுவதற்காக அமெரிக்காவின் லாக்கீட் மார்ட்டின் நிறுவனமும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் உடன்பாடு செய்துள்ளன.
லாக்கீட் மார்ட்டின் நிறுவனம் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது. இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை வாங்குவதற்கு விவரங்களைக் கோரும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்த டெண்டரைப் பெற லாக்கீட் மார்ட்டின், போயிங், டசால்ட், யூரோபைட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் விமானத் தயாரிப்புத் தொழிலில் காலூன்றுவதற்காக அரசுத் துறையைச் சேர்ந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் லாக்கீட் மார்ட்டின் நிறுவனம் உடன்பாட்டில் கையொப்பமிட்டுள்ளது.