மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
போராட்டங்களை தடுக்கும் விதமாக நாளை முதல் முகநூல் பயன்பட்டுக்கு ராணுவம் தடை விதித்துள்ளது. மேலும் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்ட சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி லட்சக்கணக்கான பதிவுகள் டிவிட்டரில் வெளியாகி வந்தன. இதனால் நேற்று இரவு முதல் டிவிட்டல் சேவை முடக்கப்பட்டுள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.