புதிதாக ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிச்சாங் செயற்கைக்கோள் வெளியீட்டு மையத்திலிருந்து, உள்ளூர் நேரப்படி இரவு 11.36 மணிக்கு இந்த செயற்கைகோள் ஏவப்பட்டது.
Long March-3B ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது.
இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, தொழில்நுட்ப சோதனைகள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் தரவு பரிமாற்றம் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்படும்.