மியான்மரில் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு, சதி மூலம் ஆட்சியை பிடித்துள்ள ராணுவத்திற்கு எதிராக மருத்துவ பணியாளர்கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்துகின்றனர்.
எதிர்ப்பை காட்ட சிவப்பு ரிப்பன்களை அணிந்து போராட்டம் நடத்தும் அவர்கள் ராணுவ அரசிற்காக வேலை பார்க்க மாட்டோம் என்ற முழக்கத்தை எழுப்பி வருகின்றனர்.
போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகளுக்கு பற்றாக்குறை உள்ளதால், மியான்மரில் கொரோனாவை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக உள்ளது.
இந்த நிலையில், மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் நடத்தும் போராட்டத்தால் கொரோனா கட்டுப்பாடு மேலும் சீர்குலையும் என கூறப்படுகிறது.
இவர்களில் சிலர் முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், பலர் சிவப்பு ரிப்பன்களை அணிந்து அரசு மருத்துவமனைகளில் மட்டும் வேலைக்கு செல்கின்றனர்.