சீனாவில் விலங்கியல் பூங்காவில் புலி தாக்கியதில் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார்.
ஹெனான் மாகாணத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த புலி ஒன்றுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக மயக்க மருந்து கொடுத்து கூண்டுடன் தூக்கிச் சென்றனர்.
அப்போது மயக்கம் தெளிந்த புலி கூண்டைத் தூக்கிச் சென்றவரின் காலைக் கடித்துக் குதறியது. இதில் படுகாயமடைந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.