2 ம் உலகப்போரில் பங்கேற்றவரும், கொரோனாவுக்கு நிதி திரட்டியவருமான கேப்டன் டாம் மூர் கொரோனா பாதிப்பால் காலமானார்.
அவருக்கு வயது 100. இங்கிலாந்தைச் சேர்ந்த டாம் மூர், கொரோனா பேரிடர் காலத்தில் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக தனது தோட்டத்தில் சக்கர நாற்காலியின் உதவியோடு 100 சுற்றுகள் நடந்து அதனை வீடியோவாக வெளியிட்டார்.
இதன் மூலம் 53 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக பெற்று சாதனை படைத்தார்.
இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் டாம் மூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.
இதனையடுத்து அவரது குடும்பத்திற்கு இங்கிலாந்து ராணி எலிசபெத், பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.