எகிப்து தலைநகர் கைரோ நகர சாலையில் 50-க்கும் மேற்பட்ட பழங்கால ஹோல்ஸ்வேகன் கார்கள் அணிவகுத்து சென்றது காண்போரை வெகுவாக கவர்ந்து உள்ளது.
கைரோவில் உள்ள எகிப்து பீட்டில் கிளப் சார்பில் பழங்கால கார் உரிமையாளர்களுக்கு உதவும் விதமாக வாரந்தோறும் கார் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
1938 களில் தயாரிக்கப்பட்ட வண்ண வண்ண ஹோல்ஸ்வேகன் கார்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் நீண்ட வரிசையில் சென்று அணிவகுப்பு நடத்தினர்.
மேலும் கார்களுடன் பயணிகள் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.