அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தோ-அமெரிக்கன் அமைப்புகள், காந்தி தங்களுக்கு உத்வேகமாக இருப்பவர் என்பதால், குற்றவாளிகளை மன்னிக்க முடியாது என தெரிவித்துள்ளன.
கலிபோர்னியாவில் உள்ள டேவிஸ் நகர பூங்காவில் காந்தியின் வெண்கல சிலை உள்ளது. இதை கடந்த வாரம் விஷமிகள் சிலர் சேதப்படுத்தினர்.
இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடக்கிறது. இந்த நிலையில் டேவிஸ் நகர பூங்காவில் அது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய நகர மேயர் குளோரியா பர்ட்டிடா, இந்த குற்றச்செயலை வன்மையாக கண்டித்தார்.