முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகனும், வெள்ளை மாளிகை மூத்த ஆலோசகருமாகவும் இருந்த ஜாரெட் குஷ்னெரின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில், அரபு நாடுகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே உறவை சீரமைத்த அவரது முயற்சிக்காக நோபல் பரிசு வழங்க வேண்டும் என அமெரிக்க அட்டர்னி ஆலன் டெர்ஷோவிட்ஸ் பரிந்துரைத்துள்ளார்.
இவர் ஹார்வார்டு சட்டக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும், டிரம்பின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவருமாவார்.
குஷ்னருடன் அவரது உதவியாளர் அவி பெர்கோவிட்சின் பெயரும் இந்த பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.