கியூபாவில் பாலத்தில் இருந்து பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 10பேர் உயிரிழந்தனர்.
ஹவானாவில் இருந்து கிழக்கு கியூபாவிற்கு ஏராளமான ஆசிரியர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மேல் இருந்து தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10பேர் உயிரிழந்தனர். மேலும் 25பேர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.