கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கனடா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவிற்கு வரும் பயணிகள் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றார். அதன் பின் அவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
சோதனையின் போது எதிர்மறையாக வந்தால், அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், நேர்மறையான முடிவு வந்தால், அவர்கள் அரசாங்கம் தனிமைப்படுத்தும் இடத்திற்கு மாற்றப்படுவர் என்றும் அவர் கூறினார். மெக்ஸிகோ, கரீபியன் நாடுகளுடனான விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.