செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

'இப்படி பண்ணினா எப்படி செவ்வாய்க்கிரகம் போறது?' - கடைசி நிமிடத்தில் ராக்கெட் நிறுத்தப்பட்டதால் கொந்தளித்த எலன் மஸ்க்

Jan 29, 2021 03:37:44 PM

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் SN9 ராக்கெட் விண்ணில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடைசி நிமிடத்தில் FAA நிறுவனம் எடுத்த அதிரடி முடிவால் அதிருப்தி அடைந்தார் எலன் மஸ்க்.

உலகின் பிரபல தொழிலதிபரான எலன் மஸ்க், அண்மையில் அமேசான் நிறுவதின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பெசோசை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 பணக்காரராக அவதாரம் எடுத்தார். எலன் மஸ்க் , பல துறைகளில் தற்போது அசத்தி வருகிறார். மின்சார கார் முதல் விண்வெளி பயணம் வரை பல துறைகளில் கால் பதித்து வெற்றி கண்டுள்ளார் எலன் மஸ்க் .

எலன் மஸ்கின் மிக பெரிய கனவுத்திட்டமாக பார்க்கப்படுவது, செவ்வாய் கிரக பயணம் தான். பல நூற்றாண்டுகளுக்கு முன் டைனோசர் இனம் அழிந்தது போல, வரும் காலகட்டங்களில் , அணுசக்தி போரினாலோ, விண்கல் தாக்கியோ மனித இனம் அழிந்து போக வாய்ப்புள்ளது. இதனால்,  செவ்வாய்க்கிரகத்தில் ஒரு நகரம் அமைக்க தனது ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் மூலம் அயராது உழைத்து வருகிறார் எலன் மஸ்க்.இதற்காக, செவ்வாய்க்கிரகத்தில் ஆய்வு மேற்கோள் ராக்கெட் அனுப்ப ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. எலன் மஸ்க்கின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக,  ஸ்பேஸ் எக்ஸ்  நிறுவனத்தின் SN9 ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் சோதனை ஒட்டத்துக்கு ,அமெரிக்காவின், பெடரல் ஏவியேஷன் நிறுவனமான FAA அனுமதி மறுத்துள்ளது.

எரிபொருள் நிரப்பப்பட்டு, டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ராக்கெட் ஏவும் தளத்தில், விண்ணில் செல்ல தயார் நிலையில் ஸ்டார்ஷிப் ராக்கெட் நின்றுகொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென, FAA நிறுவனம் , ஸ்டர்ஷிப் ராக்கெட்டை விண்ணில் செலுத்த தடை விதித்தது. கடைசி நிமிடத்தில் அறிவிக்கப்பட்ட தடையால்,  பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது.

ஸ்டர்ஷிப் ராக்கெட்டில் முறையான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறவில்லை என்று கூறி FAA நிறுவனம் அந்த ராக்கெட்டிற்கு அனுமதி மறுத்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எலன் மஸ்க் , தன் ட்விட்டர் பக்கத்தில் , 'FAA நிறுவதன் விதிகள் மிகவும் கடுமையாக இருப்பதாக விமர்சித்த மஸ்க் , இந்த நிலை தொடர்ந்தால் , மனித இனம் செவ்வாய்க்கிரகத்திற்கு செல்லவே முடியாது' என்று விமர்சித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்,ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்திய SN8 ராக்கெட் , பூமியில் தரையிறங்கியபோது இயந்திர கோளாறு காரணமாக வெடித்து சிதறியது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
ரஷ்யாவை சேர்ந்த பிரபல பாலே நடன கலைஞருக்கு பிரியா விடை..
கின்னஸ் சாதனை நாள்: உலகின் உயரமான, குட்டையான பெண்கள் சந்திப்பு
காசாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் வலியுறுத்தி ஐநா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..
பிரிட்டன் பெல்ஃபாஸ்ட் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் இந்திய துணைத் தூதரகம் - பிரதமர் மோடி
பிரான்ஸ் ராணியின் வைர நெக்லஸ் ஏலத்தில் விற்பனை.. இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது
கிழக்கு ஆப்பரிக்காவில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏரியின் தெற்கே உள்ள ருசிசி அணையில் நீரோட்டம் பாதிப்பு
லண்டனில் இளம் பெண்ணின் சடலம் காரில் இருந்து மீட்கப்பட்டது குறித்து விசாரணை
ரஷ்யாவுடனான போரை அடுத்த ஆண்டு முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை
நாசாவிற்குப் போட்டியாக சீனா அமைத்துவரும் 'டியாங்காங்' விண்வெளி மையம்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement