சீனாவின் வூகான் நகரில் கொரோனா தொற்று எப்படி உருவானது என்பது தொடர்பான ஆராய்ச்சியை உலக சுகாதார அமைப்பின் வல்லுநர் குழு தொடங்கியுள்ளது.
பல்வேறு தடைகளை தாண்டி வூகானில் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு கள ஆய்வைத் தொடங்கியுள்ள வல்லுநர் குழு, அங்குள்ள ஆய்வகங்கள், சந்தைகள் மற்றும் மருத்துவமனைகளை பார்வையிட திட்டமிட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், வூகானில் இரண்டு வாரங்கள் ஆய்வு செய்யவுள்ள வல்லுநர் குழு, கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சந்தித்து பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.