அமெரிக்காவில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய பயங்கரவாத எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அதிபராக பைடன் பதவியேற்றுள்ள நிலையில், அவரின் ஆட்சியை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களில் கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதனால் நாட்டின் பாதுகாப்பும், ஒற்றுமையும் சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளதால், நாடு தழுவிய பயங்கரவாத எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.