அமெரிக்காவின், வாஷிங்டன் நகரில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பராமரிப்பாளருடன், பாண்டா குட்டி விளையாடும் காட்சி வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பூங்கா திறக்கப்படாத நிலையில், பிறந்து 5 மாதங்களே ஆன பாண்டா குட்டிக்கு, நோய் தொற்று ஏதும் பரவாமல் இருக்க பராமரிப்பாளர்கள் அதனை கவனத்துடன் பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் பராமரிப்பாளருடன் பாசமாக விளையாடும் பாண்டா குட்டியின் வீடியோ காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.