போலாந்து நாட்டில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் வகையிலான சட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சட்டம் அமலுக்கு வருவதன் மூலம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் மற்றும் முறையற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே கருக்கலைப்பு செய்யப்படும்.
இதனால், இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வார்ஷா பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் கறுப்பு ஆடைகள் அணிந்தும், கறுப்பு கொடிகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.