அமெரிக்காவில் பாலியல் வன்புணர்வு வழக்கில் சிறையில் உள்ள ஹார்வி வெயின்ஸ்டீன், இழப்பீடு தொகையாக ரூபாய் 123 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் திரைப்படத்தில் வாய்ப்பு கேட்கும் தங்களுக்கு ஹார்வி, பாலியல் தொல்லை கொடுத்ததாக 80க்கும் மேற்பட்ட நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, கடந்தாண்டு நடத்தப்பட்ட விசாரணையில் புகார்கள் நிரூபிக்கப்பட்டு, ஹார்விக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது இவரால் பாதிக்கப்பட்ட 37 பெண்களுக்கு இழப்பீடு தொகையாக ரூபாய் 123 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.