கொரோனா தடுப்பு மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்போவதாக ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது.
ஆஸ்ட்ரா ஜெனகா மற்றும் பைசர் ஆகிய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் சொன்ன தேதியில் மருந்து சப்ளை செய்யாமல் தாமதம் செய்து வருகின்றன.
மருந்து உற்பத்தியில் ஏற்பட்ட பின்னடவு இதற்கு காரணமாக கூறப்படுகிறது.இரண்டு மருந்து நிறுவனங்களும் உரிய நேரத்தில் மருந்து டோஸ்களை விநியோகிக்காததால், இரு மருந்து நிறுவனங்களுக்கும் ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுநலன் கருதி மருந்து தயாரிப்பில் கணிசமான அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் வாக்குறுதி அளித்தபடி மருந்து உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது.